மாலின் குண்டாங்
முன்னொரு காலத்தில் மேற்கு சுமத்ராவின் கடற்கரையில் உள்ள மீனவக் கிராமத்தில் மாண்டே ருபாயா என்ற தாயும் அவள் மகன் மாலின் குண்டாங்கும் வாழ்ந்தனர். மாலினின் தந்தை நெடுநாட்களுக்கு முன் கடற்பயணம் சென்று திரும்பவே இல்லை. மாண்டே ருபாயா பலகாரங்களும் கருவாடும் விற்றுக் கடினமாக உழைத்தாள். மாலின் அறிவுள்ள சிறுவன்; அம்மாவுக்கு உதவ விரும்பினான்.