புருணை வீரன் அவாங் செமாவுன்
முன்னொரு காலத்தில் தெம்புரோங்கில் உள்ள காராங் என்ற இடத்தில் பதினான்கு சகோதரர்கள் வாழ்ந்தனர். மூத்தவன் பெயர் அவாங் அலாக் பெத்தாதார். அவனுடைய தம்பிகளில் ஒருவன் அவாங் செமாவுன். அவாங் செமாவுன் மிக உயரமாகவும், கிராமத்தில் எல்லோரையும் விடப் பலசாலியாகவும் இருந்தான். சிறுவயது முதலே ஆற்றிலிருந்து விறகும் தண்ணீரும் சுமந்து பெற்றோருக்கு ஆர்வத்துடன் உதவினான்.